வாலிபன் பாகம்-7

Leave a comment

சில நாட்கள் சென்றது.அருளும் சுவாதியும் பேச ஆரம்பித்தார்கள் .தினமும் விளையாடும் பொழுது பழக்கம் ஏற்பட்டது.
அருள்:அன்பு அவள் அண்ணன் எப்படி இறந்தான் கண்டுபிடிச்சியா.

அன்பு:கண்டுபிடிச்சிட்டேன் டா.அவள் அண்ணன் ஒருத்திய serious ah love பண்ணினான் டா.அந்த பொண்ணு அப்பா வந்து ஐஸ் விக்கிறவரு டா,அவளுக்கு ஒரு அண்ணன் போலீஸ் டா.இந்த விஷயம் அந்த பொண்ணு வீட்டுக்கு தெரிஞ்சு இவன warn பண்ணி அனுபிருகாங்க.ஆனா சுவாதி அண்ணன் திரும்ப திரும்ப அந்த பொண்ண follow பண்ணதுனால அந்த பொண்ணு அப்பாவும் அண்ணனும் சேர்ந்து இவன ஒரு நாள் நைட் கொலை பண்ணிடங்கனு பேசிகறாங்க மச்சி.சுவாதி அண்ணன் லவ் பண்ற பொண்ணு அண்ணன் போலீஸ் அதனால இந்த விசியத்தை மூடி மரசிட்டாங்க டா.அதான் சொல்லுறேன் சுவாதி வேண்டாம் டா.

அருள்:மச்சி எத வேணாலும் சொல்லு செய்றேன் சுவாதி மட்டும் விடமுடியாது டா.

குஹன்:டே அருள் அன்பு இவ்ளவு சொல்லியும் நீ திருந்தமாட்டியா.வீனா வம்பாயிரும் விற்று டா.

நிமல்:அருள் நீ போய் யோசிடா நல்ல நிதானமா யோசி அப்பறம் முடிவெடு இது உன் வாழ்க்கை டா.அவ உன்ன லவ் பண்றாளா?

அருள்:ஆமாம் டா அவ என்னோட பேசறது பழகறது வச்சு பார்க்கிறப்ப அப்படிதான் மச்சி தோணுது.

நிமல்:சரி டா.நீ யோசி அப்பறம் பார்போம் அப்படி உண்மைலேயே அவ லவ் பண்ணான நாங்க help பண்றோம்.

அருள்:சரி மச்சி நாளைக்கு பார்போம் இன்னைக்கு ஒரு முடிவு பண்ணிட்டு வரேன் .

அடுத்த நாள் காலை அருள் கல்லூரிக்கு சென்றான் .

அன்பு,நிமல்,குஹன் :மச்சி என்ன முடிவு பண்ணிருக்க.

நிமல்:அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி டா.அந்த பொண்ணு வந்து இப்பவே அவகூட வர சொன்ன உன் அப்பா அம்மா விட்டுட்டு போவியா.

அருள்:அது முடியாது டா.

நிமல்:நீயே இப்படி இருக்கும் பொது அவ பொண்ணு டா யோசிச்சு பாரு.

அருள்:மச்சி நான் முடிவு பண்ணது வேற டா .

அன்பு:என்னனு சொல்லுடா .

அருள்:நா அவளைத்தான் லவ் பண்ணுவேன் ஆனா அவகிட்ட சொல்லாமலே.அன்பு நீ அவள் அண்ணன் கதை சொன்ன பிறகு தான் இந்த யோசிச்சேன்.அவள் குடும்பத்தில் இருந்து இன்னொரு உயிரை பிரிக்க நான் விரும்பல டா.இன்னும் காலேஜ் முடிய 2 நாள் தான் இருக்கு . அதனால அவளுக்கு எந்த பாதிப்பும் இல்லாம நான் நானாக இந்த காலேஜ் விட்டு பிரியபோறேன் விதி எங்கள ஒன்னுசெர்க்கும் என்ற நம்பிக்கையில் .மச்சி இனி நான் அவள பார்பேன்னான்னு கூட தெரியாது இருந்தாலும் அவ நல்லது தான் எனக்கு முக்கியம்.இது உங்களுக்கு சோகமா இருக்கலாம் ஆனா இதுதான் எனக்கு சரின்னு பட்டுது.நான் ஒரு சராசரி வாலிபனாகவே பிரிகிறேன். இது தான் ஏன் தற்காலிக முடிவு.

முற்றும்.

p.s:Due to lack of time i am temporarly finishing this story with this climax.if i get time in future will recontinue this story.sorry for those who expected much more from me.i heartly thank all those who supported me to write this blog without u it wouldnt be possible for me.After starting this story my blog stats raised at higher rate and almost reached around 10k which is a milestone for me.once again thanks to readers and visitors.Scoldings are always welcome as i myself not satisfied but due to timeconstraint i am forced to do so.

Advertisements

வாலிபன் பாகம்-6

Leave a comment

ஒரு பெண் குரலில் hello excuse me என்று கேட்க அருள் திரும்பினான்.அவன் திரும்பியவுடன் அதிர்ச்சி ஆம் அந்த பெண் சுவாதி தான்.

அருள்:wat u want .

சுவாதி::இது girls விளையாடற இடம் நீங்க அப்படி போய் விளையடுரின்களா.

அருள்:ஓகே.

நிமல்:என்ன மச்சி எவ கேட்டாலும் இடம் கொடுக்க மாட்ட இவ கேட்ட உடனே கொடுக்ற என்ன விஷயம்.

அருள்:இவதாண்டா அவ.

நிமல்:புரிஞ்சிது மச்சி உன் வாழ்கை அவள் கையிலா?ரைட் விடு.

அருள்:வா மச்சி அப்பறம் விளையாடுவோம்.

எவர்கள் நன்கு பெரும் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

குஹன்:என்னடா அன்பு எதையும் பேச மாடின்கிற.

அன்பு:அப்பாவுக்கு இந்த வீடு சரியில்லன்னு வேற வீடு பாத்திருகாங்க டா.

அருள்:எங்க மச்சி

அன்பு:வடபழனில டா.

அருள்:மச்சி thanks டா .

அன்பு:எதுக்கு டா.

நிமல்:அவன் அங்க போறதுக்கு நீ thanks சொல்லரதுக்கும் என்ன சமந்தம்.

அருள்:மச்சி அவ வீடு அங்க தாண்டா.

குஹன்:மச்சி அப்ப இவன் அடி வாங்கறதா உங்க வீட்லேர்ந்து பாக்கலாம் போல இருகே.

அருள்:சும்மா இருங்க டா இனிமே அன்பு, உங்க வீட்டுக்கு நான் அடிக்கடி வருவேன் டா.

அன்பு:சரி சரி .

அன்பு வீட்டிற்கு வந்தான் அவன் அம்மா வீடு இந்த வாரம் வெள்ளி கிழமை போறோம் என்று சொன்னால்.வெள்ளிகிழமை அன்று அன்பு,அபபா,அம்மா ஆகியோர் வடபழனி வீட்டிற்கு சென்றனர்.அது ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு.இந்த வீட்டில் இருந்து அவன் கல்லூரி மிகவும் பக்கம்.சில வாரம் சென்றது .
ஒரு நாள் வழக்கம்போல் இவர்கள் விளையாடி கொண்டிருக்கையில் சுவாதி மற்றும் அவள் தோழிகள் விளையாட வந்தனர்.

நிமல்:மச்சி அவங்களுக்கு நாளைக்கு match டா.

அருள்:எனக்கு எப்பவோ தெரியும் டா இதெல்லாம் நான் ஏற்கனவே note பண்ணிட்டேன்.

குஹன்:மச்சி நமக்கு செம் எப்ப ஆரம்பிக்குது தெரியுமா அருள்.

அருள்:தெரியல மச்சி.

நிமல்:ஆமா டா இதெல்லாம் correct ah பாத்துவை ஆனா செம் மறந்துரு.

அருள்:விடு மச்சி இப்ப நான் போய் all the best சொல்லறேன் அவ சிரிப்பா பாரு.
அருள் உடனே ஓடி போய் all the best சொன்னான்.

அருள்:அவள் சிரிச்சாளா.

நிமல்:அவ மட்டும் இல்ல மச்சி அவ friends உம் சேந்து சிரிச்சாங்க.

அருள்:போதும் டா இனிமே நான் போய் பேசறது i love u ah தான் இருக்கும்.

குஹன்:என்னமோ பண்ணு போ அடிவாங்காம இருந்த சரி.

இப்படி எல்லோரும் சந்தோஷமாக இருக்கையில் ஒரு நாள் அருள் அன்பு வீட்டிற்க்கு வந்தான்.அன்புவிடம் பேசி கொண்டு இருக்கையில் வீட்டின் calling bell அடித்தது.அன்பு போய் பார்கையில் சுவாதி கையில் பால் உடன் நின்றுகொண்டு இருந்தால்.ஆம் சுவாதி தான் அன்பு வீட்டின் அருகில் வந்திருக்கும் புது வீட்டின் சொந்தகாரர்கள்.அவளும் கையில் வைத்திருந்த பாலை எல்லாருக்கும் பரிமாறினால் அருளுக்கும் தான்.

அருள்:மச்சி அவ உங்க area nu நெனச்சேன் ஆனா பக்கத்துக்கு வீடுன்னு நினைக்கல டா.

அன்பு :சும்மா இருடா டா 2 மாசத்துக்கு முன்னாடி ஒருநாள் அவங்க அண்ணன் 27 வயசு இருக்கும் மர்மமான முறையில் இரவு ரெண்டு மணிக்கு roadla இரந்துகடந்தாங்கலாம் டா.அவளுக்கு அண்ணன் ரெண்டு பேரு டா twins அதுல்ல ஒருத்தன் தான் இறந்தது.இது எங்க வீட்ல கூட யாருக்கும் தெரியாது டா.

அருள்:அப்படியா மச்சான்.சரி மச்சான் நான் கெளம்புறேன்.
தொடரும்-6

வாலிபன் பாகம்-5

Leave a comment

முன்கதை சுருக்கம்:அவர்கள் முவரும் பேசிக்கொண்டு இருக்கையில் அன்பு பதட்டத்துடன் ஓடி வருகிறான் கண்களில் கண்ணீருடன்

நிமல்:மச்சி என்னாச்சு டா ஏன்டா அழுகிற சொல்லுடா.

அன்பு:அப்பாவ ஆஸ்பத்திரில சேத்திருக்காங்க டா.

குஹன்:மச்சி என்ன சொல்ற என்னடா ஆச்சு அப்பாவுக்கு.

அன்பு:தெரியல டா சீக்கிரம் வர சொன்னங்க எனக்கு பயமா இருக்கு டா.

அருள்:மச்சி நாங்கெல்லாம் இருக்கோம் டா கவலை படாத வா போவோம்.

நான்கு பேரும் மருத்துவமனையை அடைத்தனர்.அன்பு receptionist இடம் விசாரித்தான் .

அன்பு:இங்க முரளி என்பவரை எந்த ரூம்ல சேத்திருக்காங்க.

receptionist :ரூம் 301.

நான்கு பேரும் 301 ரூமை அடைத்தனர்.

அன்பு:அம்மா என்னம்மா ஆச்சு காலேல நல்லத்தான இருந்தாரு.

அம்மா :காலேல நல்லாத்தான் சவாரிக்கு போனாரு மதியம் சாப்ட்டு துங்குனாறு எதயோ கண்டு பயந்த மாதிரி ஏந்திரிசாறு நெஞ்சு வலிக்கிதுன்னு சொன்னாரு டா அதான் உடனே இங்க வந்திட்டோம்.

அன்பு:இப்ப எப்படி இருக்கு அப்பாவுக்கு.

அம்மா:டாக்டர் இன்னும் சரியா எதும் சொல்ல மாட்டேன்கிராறு.

நிமல்:மச்சி ஒன்னும் கவலை படாத இதெல்லாம் இப்போ சாதாரணம் .அம்மா நீங்களும் கவலை படாதிங்க.

டாக்டர் வந்தார், நீங்க இனிமே கவலை பட தேவையில்லை என்று சொல்லிவிட்டு, ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதற்க்கு ஒன்றரை லட்சம் ஆகும் ஆனாலும் கலைஞர் காப்பிட்டு திட்டம் இருப்பதால் நீங்கள் எதையும் கட்ட தேவையில்லை என்று சொன்னார்.முரளி(அன்புவின் அப்பா)சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.இருப்பினும் அன்புவுக்கு எதனால் அப்பாவுக்கு இப்படி ஆனது எதை பார்த்து பயந்தார் என்பது இவனக்கு ஒரு புரியா புதிராய் இருந்தது. ஆனாலும் அவன் அப்பாவிடம் கேட்கவில்லை ஏனென்றால் டாக்டர் அப்பாவிடம் எந்த ஒரு அதிர்ச்சியான செய்தியையும் சொல்ல கூடாது என்று சொல்லிருகிறார்.

சில நாட்கள் கழிந்தது அன்பு மீண்டும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தான்.அன்புவின் அப்பா சிகிச்சையால் நிமல்,அருள்,குஹன் என்று யாருமே விளையாடவில்லை.இதனால் அருள் சுவாதியை பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது.

அருள்:அன்பு இன்னைக்கு விளையாடலாமா.

அன்பு:இல்ல மச்சி மனசு சரியில்ல .

அருள்:மச்சி அப்பாதான் சரியாகிடாங்கள்ள நீ அதையே நினைக்காம வந்து விளையாடு .

நிமல்:ஆமாம் மச்சி நீ விளையாடு எல்லாம் சரியாகும்.

அன்பு:சரி டா.

எப்பொழுதும் நன்றாக விளையாடும் அருள் இன்றைக்கு சரியாக விளையாடவில்லை.

குஹன்:என்ன மச்சி சரியாய் விளையாட மாட்டேன்கிற .

அருள்:ஒன்னும் முடியல டா அவள பாக்காம.

நிமல்:மச்சி இதெல்லாம் overda நீ எப்பொழுதும் இப்படி தான் மொக்கைய விளையாடுவ இன்னைக்கு கில்லி விஜய் மாதிரி புது காரணம் சொல்லாத .சும்மா ஒரு பேச்சுக்கு நீ நல்ல விளையடுவன்னு குஹன்சொன்னா அதுக்கு இவளவு பெரிய bit ah .

இவர்கள் இப்படி விளையாடி கொண்டு இருக்கையில் தீடிரென்று அருள் மட்டும் ஓடஆரம்பித்தான்.சிறிது நேரம் கழித்து வந்தான்.

அன்பு:என்னடா எங்கள விளையாட சொல்லிடு நீ பாட்டுக்கும் ஓட்ற.

அருள்:இல்ல மச்சி ரொம்ப நாளுக்கு அப்பறோம் அவள் பாத்தேன் டா அதான்.

நிமல்:அத இங்கிருந்தே பாக்க வேண்டியதானே அதென்ன ஓடி பொய் பாக்கிறது.

குஹன்:மச்சி என்னடா மரந்துடிங்களா இவனக்கு கிட்ட போய் பார்த்த தாண்டா ஒழுங்கா தெரியும்.

அருள்:சும்மா ஓட்டாதிங்க டா ,நான் அவள பாக்க போனேன் டா அப்பா அவ என்ன பாத்து சிரிச்சா மச்சி.

நிமல்:சும்மா சொல்லாத டா .

அருள்:மச்சி சத்தியமா அவ என்ன பார்த்து தான் சிரிச்சா .

நிமல்:அப்படி நீ என்னடா பண்ண .

அருள்:ஒன்னும் இல்லடா சும்மா கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சேன் அவளவு தான் .

குஹன்:மச்சி இப்ப தெரிஞ்சிருச்சு அவ ஏன் உன்ன பாத்து சிரிச்சானு ,டே நீயோ கூல்ட்ரிங்க்ஸ் straw போட்டு குடிப்ப அத பார்த்து ஏழு கழுத வயசாச்சு இன்னும் strawla குடிகிறேன்னு சிரிச்சிருப்பா டா.

அருள்:நீ என்ன வேணாலும் சொல்லு டா எனக்கு அவள தான் புடிச்சிருக்கு ,இத யாராலையும் மாத்த முடியாது.

என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது hello excuse me என்று ஒரு பெண்குரல் கேட்டது .அருள் யாரென்று திரும்பி பார்த்தான்.

தொடரும்-5

வாலிபன் பாகம் -4

Leave a comment

அன்பும் அருளும் விளையாடும் பொழுது தூரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.அருள் அதனை கவனித்தான் சற்று நன்றாக முகத்தை பார்க்கும் பொழுது அந்த பெண் தான் நிமலின் காதலி என்று அவனுக்கு தெரிந்தது .அருள் அதனை அன்புவிடம் கூறினான் இவர்களுக்கு என்ன பண்ணுவதென்றே தெரியவில்லை.

அன்பு:மச்சி அவங்க சும்மா பேசிட்டு இருபாங்க நீ டென்ஷன் ஆகாத.

அருள்:இல்ல மச்சி இவங்கள நான் ஏற்கனவே நிறைய இடத்துல பாத்து இருக்கேன் டா.

அன்பு:நீ இத நிமல் கிட்ட சொல்லாத அப்பறம் பாத்துப்போம்.

அருள்:சரி மச்சி.

என்று இவர்கள் மீண்டும் விளையாட ஆரம்பித்தார்கள்.
அடுத்த நாள் நிமலும் குஹனும் வந்தார்கள் அருளுக்கு என்ன சொல்வந்தேன்று தெரியாமல் மௌனம் சாத்திதான்.

நிமல்:மச்சி என்ன நேத்திக்கி விளையாடிநிங்களா.

அருள்:அமாம் மச்சி நீ எங்க போயிருந்த.

நிமல்:இல்ல மச்சி என் ஆள் வரன்னு சொன்னா அதான்.

அருள்:வந்தாளா.

நிமல்:இல்ல மச்சி எதோ exam இருக்காமா அதான் வரமுடியலன்னு சொன்னா.

அருள்:விடு மச்சி .

அருளுக்கு அவள் பொய்சொன்னது பளிச்சென்று பட்டது. அருள் உடனே யோசிக்க ஆரம்பித்தான் இது அவள் மேல் உள்ள தவறா இல்ல அவள் பேசிய பையன் மேல் உள்ள தவறா.நாட்கள் சென்றது இவர்களும் விளையாட ஆரம்பித்தார்கள்.நிமலும் சந்தோஷமாக விளையாடினான் உண்மை அறியாமலே.இவர்கள் நால்வரில் அருள் பள்ளியிலிருந்தே கைபந்து வீரர் . அதனால் இவர்கள் கைபந்து விளையாட ஆரம்பித்தார்கள்.மற்ற மூவரும் அருளிடம் இருந்து கைபந்து கற்றுக்கொண்டார்கள்.தினமும் இவர்கள் விளையாட்டு தொடர்ந்தது.

ஒரு நாள் மார்ச் 1 அன்று அருள் விளையாடும் போது அவர்கள் கல்லூரியில் விளையாட்டு வீரர்களுக்கான meeting ஒன்று ஏற்பாடு செய்திரிந்தார்கள்.அது பெண்களுக்கான meeting .வழக்கம் போல் இவர்களும் விளையாட சென்றார்கள்.விளையாடி முடித்தவுடன் நான்கு பேரும் ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும் சமயத்தில் ஒரு பெண் அவர்களை தாண்டி சென்றால் கையில் ஒரு list உடன்.அன்பு,நிமல்,குஹன் மூவரும் சுவாரசியமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் ஆனால் அருள் மட்டும் அவர்களை தாண்டி சென்ற பெண்ணை பார்த்தான்.அவனக்கு பார்த்த உடனே அவளை பிடித்து விட்டது.அவள் அன்றைக்கு செய்த குழந்தை தனமான விஷயங்கள் மற்றும் அவள் முகம் இவனை தூங்க விடாமல் செய்தது.இருந்தாலும் அருள் இதனை அவன் நண்பர்களிடம் சொல்லிக்கொள்ளவில்லை.சில நாட்கள் சென்றது அவளை பார்த்து பல நாட்கள் ஆய்விட்டது என்ற துக்கம் இவனை வாட்டியது.ஒரு வழியாக இவன் அவன் நண்பர்களுடன் சொல்லவேண்டும் என்று முடிவெடுத்தான்.

அருள்:மச்சி ஒரு விஷயம் டா.

குஹன்:என்ன மச்சி சொல்லு .

அருள்:அதான் எப்படி சொல்லுவதென்று தெரியல மச்சி.

நிமல்:என்னடா இது புதுசா இருக்கு நமக்குள்ள என்ன சொல்லு .

அருள்:மச்சி ஒரு பொண்ண பார்த்தேன் டா.

நிமல்:ஆமா இது உலகத்துல உனக்கு மட்டும் தான் நடக்குது சும்மா வெட்டி சீன் போடாம சொல்லு டா.காலேஜ்னா பொண்ணு வருவாங்க போவாங்க இதெல்லாம் ஒரு matter ah .

அருள்:அதில்ல டா இது வேற.

குஹன்:மச்சி என்ன அதுவா.

அருள்:ஆமா டா.

அன்பு:ஐயோ அப்ப நான் மட்டும் தான் நம்ம நாலு பேருள்ள நல்ல பையனா.

நிமல்:தேவை இல்லாம attendance போடாத டா நீ எந்த dept முன்னாடி உக்காந்திட்டு இருக்கணு எனக்கு தெரியும்.

அன்பு:right விடு cool down நிமல் நான் கொஞ்ச அங்க போயிட்டு வரேன் .

நிமல்:கெளம்பு கெளம்பு அருள் நீ சொல்லு டா அந்த பொண்ணு பேரென்ன எந்த year .

அருள்:பேரு S.Swathi 3rd year டா

நிமல்:மச்சி என்னடா initial ஓட சொல்ற கலக்கு.

அருள்:மச்சி இதுல என்ன ஒற்றுமை பாரேன் என்னோட பேரு A .Arul.My initial and starting letter of my name A A(same) for her also her intial and her name starting letter same S S(same) எப்புடி.இதுலேந்து உனக்கு என்ன தெரியுது.

நிமல்:உன்னக்கு இங்கிலீஷ் பேச வராதுன்னு தெரியுது.மூடிட்டு தமிழ்ல சொல்லிருக்கலாம் .

அருள்:விடு மச்சி அவளக்கு தமிழ் தெரியாது .

நிமல்:கிழிஞ்சிது போ அப்ப அவளவு தான்.good combination.

அருள்:இன்னும் ஒன்னு சொல்லட்டா.குஹன் :சொல்லு டா உன் கதை கேக்றதுக்கு காமெடியா இருக்கு.

அருள்:அவளும் volleyball player நானும் volley player .

நிமல்:செல்லாது செல்லாது உன்னை எல்லாம் player ah ஏத்துக்க முடியாது.
இப்படி இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது அன்பு பதட்டத்துடன் ஓடிவந்தான் கண்களில் கண்ணீருடன்.

தொடரும்-4

post ur suggestions and comments.

வாலிபன் பாகம் -3

Leave a comment

ஒருவன் என்ன நடக்குதென்று தெரிந்து கொள்ள முடியாமல் இரத்த வெள்ளத்தில் பிணமாய் !
அதன் தொடர்ச்சி

ஆட்டோவில் இருந்தவர்கள் இறந்த வாலிபன் யார் என்று பார்பதற்காக இறங்கி வந்தார்கள்.இறந்த வாலிபன் முகத்தை பார்த்ததும் இவர்களுக்குள் அதிர்ச்சி ஆம் இறந்து கிடந்தவன்தான் இவர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடிய வாலிபன்.இவர்களுக்கு ஒன்னும் புரியவில்லை இந்த வாலிபன் அவர்களை பின்தொடர்வது போல அவர்கள் மனதில் பட்டது .இவர்கள் தாங்கள் இங்கு இருந்தால் போலிசிடம் மாட்டி கொள்வோம் என்று வீட்டிற்க்கு விரைந்தனர்.மூவரும் அவரவர் வீட்டை அடைந்தனர்.அந்த மூவருள் ஆட்டோ ஒட்டியவன் பெயர் முரளி வயது 42 அவரின் நண்பர்கள் பெயர் சிவா(41 ) மற்றும் ஏழுமலை(42 ) இவர்களும் ஆட்டோ ஓட்டுனர்கள்.இவர்கள் மூவரும் எப்பொழுதும் ஒன்றாகதான் இருப்பர். இவர்கள் எல்லோரும் வீட்டை அடைந்த நேரம் மணி 3. முரளி தன் வீட்டு கதவை தட்டினான்.வீட்டினுள் இருந்து வாலிபன் குரல் ஒன்று யார் என்று கேட்டது.

முரளி:அப்பா டா கதவ தெரடா அன்பு

அன்பு:நீங்களா அப்பா நான் யாரோ எவரோன்னு பயந்திட்டேன்.ஏம்ப்பா late

முரளி:சவாரி இரிந்திச்சு டா

பின் அன்புவும் அவன் அப்பாவும் தூங்க சென்றார்கள்.முரளிக்கு தூக்கமே வரவில்லை ஏதோ அமனுஷியம் நிகழ போகிற மாதிரி ஒரு உணர்வு அவனுள் இருந்து அவனை வாட்டியது.போக போக சரியாகி விடும் என்று
தன்னை ஆறுதல் படுத்திகொண்டு தூங்க ஆரம்பித்தான் .

மறு நாள் காலை அன்பு கல்லூரிக்கு புறப்பட்டான்.அன்பு ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவன்.நன்கு படிக்ககுடியவன்.வழக்கம்போல் அவனும் தினமும் கல்லூரிக்கு சென்று வந்துகொண்டிருந்தான்.காலம் சென்றது அவன் தந்தை முரளியும் அந்த வாலிபன் மரணம் அடைந்ததை மறந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தான்.ஒரு நாள் கல்லூரிக்கு சென்ற அன்பு வழக்கத்துக்கு மாறா 8 மணிக்கு வீடுதிரும்பினான்.எப்பொழுதும் வீட்டிற்கு சீக்கிரம் வரும் அன்பு தினமும் நேரம் கழித்து வர ஆரம்பித்தான்.அன்புவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தை அடுத்து அவன் பெற்றொர் அவனை விசாரிக்க ஆரம்பித்தனர்.

அப்பா:ஏன்னடா தினமும் late ah வர

அன்பு:சும்மாப்பா கடைசி sem அதான் எல்லாரும் விளையாடிட்டு வரோம்.இன்னும் கொஞ்ச நாளைக்கு தானப்பா

அப்பா:சரி சரி கொஞ்சம் சீக்கிரம் வர பாரு

அன்பு:செரிப்பா

அடுத்த நாள் கல்லூரிக்கு புறப்பட்டான் அன்பு.அன்புக்கு கல்லூரியில் எல்லாருடனும் நன்கு பழகுவான் அனாலும் இவனக்கு மூன்று நண்பர்கள் அவர்கள் பெயர் அருள்,நிமல் மற்றும் குஹன்.இவர்கள் தான் எப்பொழுதும் விளையாடுவார்கள்.இப்படி இவர்கள் தினமும் விளையாடி வந்தார்கள்.இந்த நான்கு பேரில் அன்புவும் அருளும் நல்ல பசங்க நிமலும் குஹனும் ஏதோ பொண்ணுபின்னாடி சுத்திகொண்டிருந்தார்கள்.

நிமல்:மச்சி இன்னைக்கு உன் ஆள் வரலையா


குஹன்:இல்லடா உன் ஆளு

நிமல்:வரல மச்சி

அன்பு:சும்மா ஆள பத்திய பேசாம விளாட வாங்க டா

அருள்:அன்பு இவங்க திருந்த மாட்டாங்க நம்ம விளாடுவோம் டா .

இப்படி இவர்கள் கல்லூரி வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது.அப்படி இருக்க ஒரு நாள் பிப் 5 அன்று நிமலும் குஹனும் வரவில்லை அதனால் அன்புவும் அருளும் விளையாடும் போது அருள் வாழ்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.அந்த திருப்பம் என்ன ,அவனை என்ன செய்தது !!!

தொடரும்-3

வாலிபன்- பாகம் 2

Leave a comment

கடந்த பக்கத்தில் அவர்களுடன் அந்த வாலிபன் பேச ஆரம்பித்தான் என்று முடித்திருந்தேன்
இப்பொழுது அதன் தொடக்கம்
வாலிபன்:அண்ணா ஆட்டோ வருமா
ஆம் அவர்கள் மூவரும் ஆட்டோகாரர்கள்
நபர் 1:வராது என்று
பயந்த குரலில் சொன்னான்
நபர் 2:மச்சி இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது அவன போசொல்லு
வாலிபன்: சீக்கிரம் போகனும்னா
இருந்தாலும் அவர்கள் இவனை ஏத்துவதாக இல்லை ஏன் என்றால் இவன் சட்டையில் இரத்த கரை
நபர் 3:என்னதிது ரத்தம்
வாலிபன்:அத சொல்றதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்லனா சீக்கிரம் போனும்னா
பின்னர் அந்த வாலிபன் நிறைய பணம் காட்டியவுடன் முவரும் சம்மதித்தார்கள்.
இவர்கள் கிளம்பும் பொழுது அந்த இடத்தில யாருமே கிடையாது ஒரு ஐஸ் வண்டிக்காரன் தவிர அவன் சற்று தொலைவில் வண்டியை தள்ளியவாறு சென்றுகொண்டிருந்தான் .அவர்களுக்குள் இருந்த பயம் இன்னும் நிங்கவில்லை இருந்தாலும் பணத்திற்காக ஆசைப்பட்டு இவனை எற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்வு இவர்களை துரத்தியது.
நபர் 1:எங்க போனும்
வாலிபன்:போற வழில சொல்றேன் இப்போ போங்கனா

அப்படி சொல்லும் பொழுது அவன் கண்ணில் ஒரு தேடல் இருந்தது
இவர்கள் ஆட்டோவில் செல்ல செல்ல யாரோ இவர்களை துரத்துவது போல உணர்ந்தார்கள் ஆட்டோகரர்களுக்கு பின்னாடி ரத்த கரையுடன் ஒரு வாலிபன், பின்னர் யாரோ பின்தொடர்வது போல ஒரு உணர்வு என்ற அவர்கள் பயத்தின் உச்சிகே சென்றனர்.
அவர்களின் ஆட்டோ சிறு தூரம் சென்றவுடன் போலீஸ் செக் போஸ்ட் ஒன்று இருந்தது அதனை தூரத்திலேயே தெரிந்து கொண்ட வாலிபன் அவர்களை நிறுத்த சொல்லி இறங்கி ஓட ஆரம்பித்தான்.அப்பொழுது மணி 1 இருக்கும் இவர்களுக்கு ஒன்னும் புரியவில்லை ஏன் அந்த வாலிபன் ஓடுகிறான் என்று ,இருந்தாலும் விட்டது சனி என்று திரும்பவும் ஆட்டோநிறுத்தத்திற்கு திரும்ப ஆரம்பித்தார்கள்.இவர்களுக்குள் ஏதோ பேசிய வாரு செல்ல செல்ல வழி மாறி வந்து விட்டோம் என்பதை உணர்ந்தனர்.அப்பொழுது இவர்களது ஆட்டோவில் இருந்து யார் தப்பித்து ஓடினானோ அவனே எதிரில் ஆட்டோவிற்காக நின்று கொண்டு இருந்தான்.இந்த மூவர் முகத்தில் ஒரு புரியா புதிர் தென்பட்டது ஏன் என்றால் அவன் நல்ல உடையில் இருந்தான் இரத்த கரை இன்றி.
நபர் 1:மச்சி இவன் எதோ பேய் போல இருக்கு டா மச்சான் வண்டிய திருப்பு
நபர் 2:ஆமாடா இவன் அவனே தாண்டா

என்று வண்டியை திருப்பி ஒரு வழியாக அவர்களது விட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்கள்.அப்பொழுது மணி 2 இவர்கள் கண் தூரத்தில் சிறிய மக்கள் கூட்டத்தின் நடுவில் ஒருவன் ரோட்டில் விழுந்து கிடப்பதை கண்டனர்.இவர்கள் அருகில் சென்று பார்த்த பொது மூவருக்கும் பேரதிர்ச்சி ஆம் ஒருவன் என்ன நடக்குதென்று தெரிந்து கொள்ள முடியாமல் இரத்த வெள்ளத்தில் பிணமாய் !

தொடரும்-2

comments and suggestions are always welcome

வாலிபன்-தொடர்கதை(episode 1)

Leave a comment

ஒரு நாள் சிங்கார சென்னையின் பிரதான சாலையில் நல்ல உயரமான வாலிபன் ஒருவன் பதட்டத்துடன் விரைந்து யாரையோ தேடிய படி வந்து கொண்டிருந்தான் .சாலையே மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி இருந்தது.அப்பொழுது அந்த வாலிபன் கண் தூரத்தில் ஒரு கடையில் இரண்டு பேர் பேசி கொண்டு இருந்தார்கள்.இவன் அவர்கள் அருகில் செல்ல செல்ல அவர்கள் பேசும் வார்த்தைகள் இவன் செவிகளில் கேட்டது.
நபர் 1 :இன்னும் என்ன யாரும் வரல .
நபர் 2 :இரு இப்பதான மணி 11 ஆகுது இன்னும் கொஞ்ச நேரம் பார்போம் .
நபர் 1: அப்பவும் யாரும் வரலன்னா என்ன பண்ணுவது .
நபர் 2 :பாத்துக்கலாம் மச்சான் அங்க பாரு தூரத்தலஒருவன் வரான் அவன் தாண்ட இன்னைக்கு.
இவர்களின் உரையாடல்களை கேட்ட படியே அந்த வாலிபன் இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தான்.அந்த நேரத்தில் இன்னொருவன் வந்து அவர்களுடன் சேர்ந்தான்.
நபர் 3 :என்ன மச்சான் இன்னும் எவனும் சிக்கலையா
நபர் 1 :இன்னும் இல்ல மச்சான்
அந்த வாலிபன் அருகில் வர வர இந்த மூவர் மத்தியில் பதட்டம் தொத்திகொண்டது.இவர்களுக்குள் ஏதோ முனுமுனுத்தபடிகண்களில் ஒரு பயத்துடன் நின்றார்கள் ஏன் என்றால் அவன் சட்டையில் ரத்த கரை இருந்தது.அவன் அருகில் வந்து இவர்களுடன் ஏதோ பேச தொடங்குகிறான் …………….
தொடரும்-1

comments r welcome.it will help me to continue the story.

Older Entries